இந்தியாவுக்கு சவால் விடுத்த இலங்கை அணி : முதல் போட்டி சமநிலையில்
புதிய இணைப்பு
இலங்கை மற்றும் சுற்றுலா இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் துனித் வெல்லாலகே ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 56 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் அக்ஷர் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இந்திய அணி சார்பில் அணித்தலைவர் ரோஹித் சர்மா 58 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
மூன்றாம் இணைப்பு
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி பெறும் தடுமாற்றத்துடன் துடுப்பெடுத்தாடி வந்த நிலையில் துனித் வெல்லாலகேயின் சிறந்த ஆட்டம் அரைச்சதத்தை கடக்க செய்ததோடு இலங்கை அணியை 200 ஓட்டங்களை கடக்க வழிவகுத்துள்ளது.
இந்நிலையில் இலங்கை அணி 50 ஓவர் நிறைவில் 230 ஓட்டங்களை பெற்றுள்ளது.
கொழும்பு பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இன்றைய போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
போட்டியின்ஆரம்பத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் இலங்கை வீரர்களை குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க செய்தனர்.
இந்நிலையில் ஒரு கட்டத்தில் இலங்கையணி 178 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுக்களை இழந்திருந்தது.
எனினும் வெல்லாலகேயின் நிதான துடுப்பாட்டம் இலங்கை அணியை 200 ஓட்டங்களை கடக்க களம் அமைத்துள்ளது.
இதன்படி இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 231 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் இலங்கை அணி மோதும் முதலாவது போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று (02) ஆரம்பமாகவுள்ளது.
குறித்த போட்டியானது இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணியை ரோகித் ஷர்மா வழிநடத்தவுள்ளார்.
டி20 தொடர்
இவரைத் தவிர டி20 தொடரைப் பிரதிநிதித்துவப்படுத்தாத விராட் கோலி, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இணைந்த பிறகு நடைபெறும் முதல் ஒருநாள் தொடர் இதுவாகும்.
இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என கைப்பற்றியது.
இந்திய அணி
இதன்படி இந்திய அணி சார்பில் ரோஹித் ஷர்மா, ஹப்மான் கில் , விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா ஆகியோர் விளையாடவுள்ளனர்.
மேலும், இலங்கை சார்பில்: சரித் அசலங்க, பதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நிஷான் மதுஷ்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, சமிக கருணாரத்னே, மஹேஷ் தீக்ஷன, அசித தனஞ்சன, அகிலா தனஞ்சன, அகிலா தனஞ்சன , எஷான் மலிங்க ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |















செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
