ரி-20 வரலாற்றில் மோசமான சாதனை படைத்த இலங்கை அணி
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது ரி20 போட்டி பல்லகெலேவில் நேற்று (30) நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியும் 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 137 ஓட்டங்களையே பெற்றது.
சூப்பர் ஓவர்
இதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
இந்நிலையில் குறித்த ஆட்டத்தில் தோல்வி கண்டதன் மூலம் இலங்கை அணி சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.
மோசமான சாதனை
அதாவது சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை சந்தித்த அணி (சூப்பர் ஓவர் உட்பட) என்ற மோசமான சாதனையை இலங்கை படைத்துள்ளது.
சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை எதிர்கொண்ட அணிகளில் இலங்கை - 105 தோல்வி, பங்களாதேஷ்- 104 தோல்வி, மேற்கிந்திய தீவுகள் - 101 தோல்வி மற்றும் சிம்பாப்வே - 99 போட்டிகளில் தோல்வியும் நியூசிலாந்து - 99 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
