இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியில் மாற்றம்
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் தலைவராக குசால் மெண்டிஸின் பெயர் முன்னதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் தற்பொழுது ஒருநாள் அணியையும் சரித் அசலங்க வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பலப்பரீட்சை
மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
ஒருநாள் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அனுமதி வழங்கியுள்ளார்.
இலங்கை ஒருநாள் அணியில் சரித் அசலங்க, பெதும் நிஸ்ஸங்க, அவிஸ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நிசான் மதுசங்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, சாமிக்க கருணாரட்ன, மஹீஸ் தீக்ஸன, அகில தனஞ்சய, தில்சான் மதுசங்க, மதீஸ பத்திரண மற்றும் ஹசித பெர்னாண்டோ ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
