தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தாத வேட்பாளர்கள் : தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக இன்று மாலை வரை நான்கு வேட்பாளர்கள் மாத்திரமே கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஆணைக்குழு இன்று (30.07.2024) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஹிட்டிஹாமிலாகே தொன் ஓஷல லக்மால் அனில் ஹேரத், ஏ.எஸ்.பி. லியனகே ஆகியோரே தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
நான்கு வேட்பாளர்கள்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேவேளை, வேட்பாளர்கள் வைப்புப் பணத்தைச் செலுத்தும்போது, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் கையொப்பத்தின் கீழான சான்றிதழொன்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் ஒரு கட்டாயத் தேவைப்பாடாகும் என ஆணைக்குழு அறிவித்திருந்தது.
இதற்கமைய,, கடந்த ஜீலை 26 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தார்.
இந்நிலையில், இன்று வரை நான்கு வேட்பாளர்கள் மாத்திரமே கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
