நெருக்கடியான நிலையில் இந்திய அணி: சவால் விடும் இலங்கை வீரர்கள்
இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் 3 ஆவது போட்டி இந்திய அணிக்கு நெருக்கடியான நிலையை உருவாக்கியுள்ளது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2ஆவது போட்டியை வெற்றிகொண்டு முன்னிலை வகிக்கின்ற நிலையில், முதலாவது போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
முன்னணி வீரர்களை உள்ளடக்கி இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய அணிக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் சவால் விடும் வகையில் செயற்படுகின்றமை பாராட்டுக்களை பெற்றுள்ளது.
இந்தியா-இலங்கை
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அசலாங்க தலைமையிலான இலங்கை அணி தொடரை வெற்றிபெறும் முனைப்புடன் காத்திருக்கின்றது.
20 ஓவர் தொடரை இலங்கை இழந்திருந்தாலும் ஒருநாள் தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
எனினும் இந்த போட்டியில் இந்தியா அணி வெற்றிபெறுமாயின் தொடரானது சமநிலையில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
