வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை துன்புறுத்தும் இலங்கை அரசாங்கம்!

Missing Persons Trincomalee Sri Lanka
By Sivaa Mayuri Aug 31, 2024 12:48 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை, இலங்கை அரசாங்கம் தொடர்ந்து துன்புறுத்துகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

தமது உரிமைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்துகின்றபோது,  இலங்கையின் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு, மிரட்டல், பொய்யான குற்றச்சாட்டுகள், வன்முறை மற்றும் தன்னிச்சையான கைதுகள் மூலம், காணாமல் போனோரின் குடும்பங்களை தொடர்ந்து துன்புறுத்துகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

திருகோணமலையில் ஒகஸ்ட் 30 அன்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தைக் குறிக்கும் வகையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஊர்வலம் நடத்துவதைத் தடை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தென்னிலங்கை மக்களுக்கு ஏற்படும் அச்சம்

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தென்னிலங்கை மக்களுக்கு ஏற்படும் அச்சம்

நூற்றுக்கணக்கான தாய்மார்கள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அன்றாடம் வேதனையில் வாடுகின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை துன்புறுத்தும் இலங்கை அரசாங்கம்! | Sl Govt Persecuting Families The Missing People

எனினும் இலங்கையின் அரச அமைப்புகள், அவர்களை அமைதியாக்க முயற்சிக்கின்றன, அத்துடன் கொடூரமான முறையில் நடத்துவதாக  மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி கூறியுள்ளார்.

நூற்றுக்கணக்கான தாய்மார்கள், மனைவிகள் மற்றும் பலர் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமலேயே காலமானார்கள், மேலும் பலர் தாம் வாழும் போதே நீதியை பார்க்க முடியாது என்று ஆதங்கப்படுகின்றனர்.

உள்நாட்டுப் போர்

இடதுசாரி ஜனதா விமுக்தி பெரமுன கிளர்ச்சியின் போது (1987-89) காணாமல் போனவர்கள் மற்றும் அரசாங்கத்துக்கும்  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (1983-2009) இடையிலான உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களை பொறுத்தவரை, உலகின் காணாமல் போனோர் வரலாற்றில் அதிகம் தொகையினராகும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை துன்புறுத்தும் இலங்கை அரசாங்கம்! | Sl Govt Persecuting Families The Missing People

எனினும் இலங்கை அதிகாரிகள் பல தசாப்தங்களாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தலைவிதியை வெளிப்படுத்தவோ அல்லது அதற்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடரவோ மறுத்து வருகின்றனர்.

இதுவே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம், சர்வதேச வழக்குகளுக்கு அழைப்பு விடுக்க வழிவகுத்துள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தென்னிலங்கை மக்களுக்கு ஏற்படும் அச்சம்

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தென்னிலங்கை மக்களுக்கு ஏற்படும் அச்சம்

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட தகவல்

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US