ஜனாதிபதி அநுர தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆட்சி பொறுப்பினை ஏற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை விமர்சிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியையும் அதன் தலைவர்களையும் ஜனாதிபதி விமர்சனம் செய்வது குறித்து பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பிரசார கூட்டங்களை நடத்தி பொதுஜன முன்னணியை விமர்சனம் செய்வதன் ஊடாக ஜனாதிபதி தனது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த விடயம் தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அநுரவின் கூட்டங்களில் பங்கேற்ற மக்கள் அவரது உரை தொடர்பில் எவ்வித துலங்களையும் மேற்கொளள்வில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ஜனாதிபதி அநுரவின் அரசாங்கம் வீழ்ச்சியடைந்து செல்வதன் வெளிப்பாடேயாகும் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.