உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்க கனடா பிரதமர் மார்க் கார்னி தீவிர முயற்சி
நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கில் சர்வதேச அளவிலான முன்னணி முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான இரண்டு நாட்கள் மாநாட்டை கனடா பிரதமர் மார்க் கார்னி டொரான்டோவில் ஆரம்பித்து வைத்துள்ளார்.
சுமார் 160 க்கும் மேற்பட்ட பல்வேறு திட்டங்களுக்காக 1 டிரில்லியன் கனடிய டொலர்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் திரட்டுவதை இலக்காகக் கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பிளக்ரொக் தலைமை நிர்வாகி லாரி ஃபிங்க் மற்றும் பிளக்ஸ்டோன் தலைவர் ஜோன் கிரே உள்ளிட்ட உலகின் முன்னணி நிதி நிறுவனங்களின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
வர்த்தக உறவு
சுரங்கம், எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து போன்ற முக்கிய துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதையே கனடா முதன்மையாக நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறிப்பாக, அல்பர்ட்டா மற்றும் நியூ பிரன்சுவிக் பகுதிகளில் தரவு மையங்கள், ஆல்பர்ட்டாவின் ஹைட்ரஜன் திட்டங்கள் மற்றும் கல்கரிக்கும் எட்மண்டனுக்கும் இடையிலான அதிவேக போக்குவரத்துத் திட்டம் போன்றவை இம்மாநாட்டில் சர்வதேச முதலீட்டாளர்களுக்குக் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்புகளால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளை ஈடுசெய்யவும், உலகளாவிய முதலீடுகளை அதிகரிக்கவும் மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக உறவுகளைப் பலப்படுத்த கனடிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனினும், இம்மாநாட்டின் மூலம் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டாலும், மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan