பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல பதவிப் பிரமாணம்
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல (Seetha Arambepola) பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இதன்படி சீதா அரம்பேபொல, இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் (Ranil Wickremsinghe) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
சீதா அரம்பேபொல, சுகாதார இராஜாங்க அமைச்சராக வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில் ரீதியாக மருத்துவப் பயிற்சியாளரான வைத்தியர் சீதா அரம்பேபொல சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தார்.

அத்துடன் 2019 டிசம்பர் முதல் மார்ச் 2020 வரை மேல் மாகாண ஆளுநராகவும் பணியாற்றியிருந்தார்.
இதேவேளை சீதா அரம்பேபொலவின் பதவிப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் (Saman Ekanayake) கலந்துகொண்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri