ஈரானியக் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் அதிரடி நிலைப்பாடு! பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஈரானியக் கப்பலில் இருந்த சிலர் காலி துறைமுகத்திற்கு வருகை தந்த விவகாரத்தில், சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் சட்டங்களுக்கு அமைவாகவே அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சுகாதாரப் பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு (24) கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கைக்கு வருகை தரும் நபர்கள்
கடல் வழியாக இலங்கைக்கு வருகை தரும் நபர்கள் தொடர்பில் அரசாங்கம் பின்பற்ற வேண்டிய சர்வதேச உடன்படிக்கைகளும் சட்டங்களும் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, சர்வதேச அகதிகள் தொடர்பான உடன்படிக்கைகள் மற்றும் சட்டங்களுக்கு அமைவாகவே இவ்விடயத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வருகை தரும் நபர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லது எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல எனக் குறிப்பிட்ட அவர், சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படுவதாகவும், இதனால் எந்தவொரு நாட்டுடனும் பிரச்சினை ஏற்படாது எனவும் சுட்டிக்காட்டினார்.
“இலங்கைக்கு ஒரு கப்பல் மூலமாகவோ அல்லது கடல் வழியாகவோ ஏதேனும் ஒரு குழுவினர் வருகை தரும்போது, நாம் பின்பற்ற வேண்டிய சர்வதேச உடன்படிக்கைகளும் சர்வதேசச் சட்டங்களும் உள்ளன.
சர்வதேச உடன்படிக்கைகள்
அதேபோன்று, சர்வதேச அகதிகள் தொடர்பான உடன்படிக்கைகளும் காணப்படுகின்றன.
இந்த உடன்படிக்கைகள் மற்றும் சட்டங்களுக்கு அமைவாகவே நாம் செயற்படுகிறோம். எனவே, வருகை தருபவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், அவர்களின் இனம் என்ன என்பது எமக்கு முக்கியமல்ல.

நாம் சர்வதேச உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கிறோம். இதனால் எமக்குப் பெரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது.
எந்தவொரு நாட்டிற்கும் இது பிரச்சினையாக அமையாது. இதுவரை நாம் சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் சட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இராணுவ அதிகாரியின் மகனையும் விட்டு வைக்காத கோட்டாபய! மகிந்தவும் மகனும் தப்பி ஓடிய இரகசிய தடுப்பு முகாம்..