தமிழருக்குத் தீர்வை வழங்க சிங்கள தேசம் தயாரா..! மாவை கேள்விக்கணை
தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க சிங்கள தேசம் தயாராக உள்ளதா என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை 'இருள் சூழ்ந்த சுதந்திரம்' எனப் பிரகடனப்படுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்கொண்ட போராட்டம் மட்டக்களப்பில் இன்று (04.02.2023) உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
தமிழ்த் தேசத்தின் விடுதலை
அதன்பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், "தமிழ்த் தேசத்தின் விடுதலைக்கும் தமிழ் மக்களின் உரிமைகளையும் பெற்றுக்கொள்வதற்கும் போராட வேண்டிய நிலைங்கு சிங்கள தேசம் இன்று நிர்ப்பந்தித்துள்ளது.
இந்தியா தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இராஜதந்திர முறையில் இந்த அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.
தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான அத்தனை
நடவடிக்கைகயையும் இந்தியா தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்"என கூறியுள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
