பதவியில் இருந்து விலகினால் அநுரவுக்கு காத்திருக்கும் ஆபத்து! யாராலும் காப்பாற்ற முடியாமல் போகலாம்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதவியில் இருந்து விலகிய பின்னர் அவர் மீது வழக்குத் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(17.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நீதித்துறையை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
கடவுள் ஆசீர்வதிக்கட்டும்
அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினால், உடனடியாக அவருக்கு எதிராக நீதித்துறையை அவமதித்தமைக்காக வழக்குத் தொடர வாய்ப்புள்ளது.
இதன்விளைவாக ஜனாதிபதி பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். அவற்றிலிருந்து அவரை யாராலும் காப்பாற்ற முடியாது.

சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு, நாங்கள் மிகக் கவனமாக பேசிய போதும், நீதிமன்ற அவமதிப்புக்காக என் மீது தற்போதைய அரசாங்கம் நான்கு முறை விசாரணைகளை நடத்தியுள்ளது.
எனவே, ஜனாபதிபதி பதவியில் இருந்து அநுர குமார விலகியதும் அவர் மீது வழக்குத் தொடரப்படும் சாத்தியக்கூறுகள் மிக அதிகம். கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.