வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்
வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் நீடிக்கப்பட்டுள்ளமையினால் மே 15 ஆம் திகதிக்கு பின்னர் கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனேஜ தெரிவித்துள்ளார்.
இதன்படி, வாகனங்களின் விலை ரூ. 1.5 முதல் 5 மில்லியன் வரை அதிகரிக்கும் என்று வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட 50 சதவீத கூடுதல் கட்டணம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் விலை அதிகரிக்கும் அபாயம்
1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட (235 ஆம் அத்தியாயம்) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10அ பிரிவின் கீழ் ஜனாதிபதிக்களிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாகனங்கள் மீதான கூடுதல் கட்டணத்தை நீட்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்று வாகன இறக்குமதியாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், டிசம்பர் 31 வரையிலான நீட்டிப்பு வாகனங்களின் விலையை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.
அதன்படி, மே 15 ஆம் திகதிக்குப் பிறகு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனேஜ தெரிவித்தார்.
வாகன இறக்குமதிக்காக மே 15 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட்ட கடன் கடிதங்களில் மேலிருப்பு (overdraft) வசதி சேர்க்கப்படவில்லை என்றும், பல வாகன விற்பனை நிலையங்கள் தற்போது மேற்கூறிய திகதிக்கு முன்னர் வழங்கப்பட்ட கடன் கடிதங்களின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விற்பனை செய்து வருவதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கமைய, மே 15 ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்பட்ட கடன் கடிதங்களின் கீழ் இறக்குமதி செய்யப்படும் ஒரு வெகன் ஆர் (Wagon R) வகை காரின் விலை 5 இலட்சமும், ஒரு டொயோட்டா ரெய்ஸ் (Toyota RAIZE) காரின் விலை 10 இலட்சத்திலும், வெசல் (Vessel) வகை காரின் விலை 15 முதல் 20 இலட்சம் வரையிலும், ஒரு பிராடோ (Prado) ஜீப்பின் விலை 30 இலட்சத்திலும்,ஒரு லேண்ட் குரூசரின் (Land Cruiser) விலை சுமார் 50 இலட்சத்திலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, ஒரு யாரிஸ் எக்ஸ் கிரேடு (YARIs X GRADE) காரின் விலை எதிர்காலத்தில் ரூ. 10.5 மில்லியனாகவும், ஒரு டொயோட்டா ரெய்ஸ் ஹைப்ரிட் (Toyota RAIZE hybrid) காரின் விலை ரூ. 15.5 மில்லியனாகவும் அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
வாகன விலைகளை அடிக்கடி மாற்றாமல், பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டால், வாகன விலை ஏற்ற இறக்கங்களை தடுக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர்.
இலங்கைக்கு இழுத்துவரப்பட்ட ஷிரான் பாஸிக் தொடர்பில் திடுக்கிடும் தகவல் : பொலிஸார் விடுத்துள்ள தகவல்கள்