ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரியை தாக்கிய ஒளிப்பதிவாளர் சற்றுமுன் அதிரடி கைது
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் தனியார் ஊடகத்தின் ஒளிப்பதிவாளர் சற்றுமுன்னர் கம்பனி வீதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கிலிருந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியே வந்தபோது, அங்கு இருந்த தனியார் ஊடகத்தை சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஒருவர் அவரது பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரைத் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் சுதந்திரமான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அதிரடி கைது
இந்த விவகாரம் மீதான தனது கருத்துக்களை ஐக்கிய தேசியக் கட்சி இன்று(0110.2026) செய்தியாளர் சந்திப்பில் போதே மேற்கண்டவாறு வெளிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணைக்காக சம்பந்தப்பட்ட ஒளிப்பதிவாளர் கம்பனி வீதி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தாக்குதலுக்குள்ளான பாதுகாப்பு அதிகாரி, சம்பவத்தின் பின்னர், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.