3 மணிநேரம் வாக்குமூலம்! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர்
புதிய இணைப்பு
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையான முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆணைக்குழுவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இன்று காலை (01) அவர் விசாரணையொன்றிற்கமைய வாக்குமூலம் வழங்க ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இதேவேளை, கடந்த அரசாங்கத்தில் முறையற்ற வகையில் இஸ்ரேலில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தமை குறித்து இவர் கைது செய்யபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.