தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்ப்பு போராட்டம் (Photos)
இலங்கையின் 75து சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழ்த் தேசி மக்கள் முன்னணியினர் இன்று யாழில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
75து சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு கரிநாள் எனத் தெரிவித்து யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் முன்னிருந்து பேரணியாக எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதேசசெயலகம் முன்னிருந்து பேரணி ஆரம்பித்து, யாழ் மாவட்டச் செயலகத்தின் வரை நகர்ந்த பேரணி எதிர்ப்பு ஆரப்பாட்டமாக இடம்பெற்றுள்ளது.
இந்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் ஆதரவாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் ஆர்பாட்ட ஊர்வம் இன்று காலை 10 மணிக்கு காந்திபூங்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் ஒன்றினைந்துள்ளனர்.


