விரைவில் முடிவுக்கு வர உள்ள ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள்!
ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வழக்கிலே பிரதிவாதிகளின் பிரதிவாதிகளின் சாட்சிய விசாரணைகள் இன்று ஆரம்பமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தான் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.வழக்கின் முறைப்பாட்டு தரப்பு சாட்சி விசாரணை 547 நாட்கள் நடைபெற்று இருக்கின்றன.
அந்தக் காலப்பகுதியில் 309 பேரிடம் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அத்துடன் பொருட்கள் தடவியல் அறிக்கைகளும் சாட்சியங்களாக இதுவரையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மிக விரைவிலே இந்த வழக்கு முடிவுக்கு வர உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.