காணாமலாக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்க கோரி மன்னாரில் கையொப்பம் சேகரிப்பு
'சம உரிமைகளை வெல்வோம் இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்' எனும் தொனிப்பொருளில் சம உரிமை இயக்கம் எதிர்ப்பு பதாகையில் கையொப்பமிடும் நடவடிக்கையொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நடவடிக்கை இன்று (16) காலை 10.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எதிர்ப்பு பதாகையில் கையொப்பம்
இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு, இன்னொரு அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய், அனைத்து தேசிய இனங்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்யும் அரசியல் அமைப்பிற்காக போராடுவோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பு பதாகையில் கையொப்பம் சேகரிக்கப்பட்டது.
இதன்போது பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து கையொப்பத்தை பதிவு செய்தனர்.















ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 6 மணி நேரம் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
