மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் 'நகர கடற்கரை பூங்கா' அமைக்கும் பணி ஆரம்பம்
மன்னார் நகர நுழைவாயிலில் பிரதான பாலத்திற்கு அருகாமையில் கடந்த வருடம் 'நகர கடற்கரை பூங்கா' அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை (15) மாலை முதற்கட்ட பணிகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உடற்பயிற்சி மேற்கொள்ளவும், பொழுது போக்கிற்காகவும் இயற்கையான முறையில் அமைக்க மேற்கொள்ளப்பட்டு வந்த கடற்கரை பூங்காவின் முதற்கட்ட பணிகள் நேற்றையதினம்(15) முன்னெடுக்கப்பட்டு ஒப்பந்ததாரரிடம் வைபவ ரீதியாக குறித்த வேலைத்திட்டம் கையளிக்கப்பட்டது.
குறித்த ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் நகர முதல்வர் டேனியல் வசந்தன், மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதப், மன்னார் நகர சபையின் செயலாளர், இராணுவ அதிகாரிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.
வேலைத்திட்டம்
மன்னார் நகரசபைக்கு குறித்த இடம் வழங்கப்பட்ட நிலையில், குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் குறித்த கடற்கரை பூங்கா அமைக்க 16 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 6 மில்லியன் ரூபாய் நிதிக்கான வேலைத்திட்டங்கள் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை(15) முதல் கட்டமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மிகுதி 10 மில்லியன் ரூபாவுக்கான வேலைத்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது. எதிர்வரும் 09 மாத காலங்களுக்குள் குறித்த வேலைத்திட்டத்தை நிறைவடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 12 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
