வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி
வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வேவா சாலைப் பகுதியில் இன்று (31) காலை 10.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் வாகனத்தில் வந்த ஒரு குழு, மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை மோதிவிட்டு, பின்னர் கூர்மையான ஆயுதத்தால் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரையும் தாக்கி, துப்பாக்கியால் சுட்டுள்ளது.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு
இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் காயமடைந்து தப்பிச் சென்றுள்ளார், மற்றொரு நபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு ரிவால்வர் ரக துப்பாக்கியால் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவரின் வழக்கு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு செப்டம்பர் 9, அன்று திட்டமிடப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 8 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
