ஈரானின் புனித நகரத்தில் பறக்க விடப்பட்ட கறுப்பு கொடி
ஈரானிய (Iran) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உயிரிழந்ததையடுத்து, ஈரானின் புனித நகரான கோமில் உள்ள பாத்திமா மசுமே பள்ளிவாசலில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் (Azerbaijan) மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதற்காக துக்கத்தை வெளிப்படுத்தும் முகமாகவே கோம் பாத்திமா மசுமே பள்ளிவாசலில் கறுப்புக் கோடி ஏற்றப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டுள்ள உடல்கள்
கோம், ஈரானில் மஷ்ஹத்திற்கு அடுத்த இரண்டாவது புனித நகரமாக உள்ளதோடு மத ஆய்வு மையமாகவும் உள்ளது.
Shrine in Qom flies black banner after deadly helicopter crash https://t.co/r0QsAsEndl
— Global Current News (@Fahadali682521) May 20, 2024
அதேவேளை, குறித்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |