இப்ராஹிம் ரைசி மரணம்! ஈரானின் புதிய பதில் ஜனாதிபதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஈரானின் பதில் ஜனாதிபதியாக அந்நாட்டு துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர்(Mohammad Mokhber) பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலங்கு வானூர்தி விபத்தில் ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi) உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படும் நிலையில் பதில் ஜனாதிபதியாக முஹம்மது முக்பர் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய ஜனாதிபதி இன்னும் ஐம்பது நாட்களுக்குள்
அந்த நாட்டின் ஆன்மீகத் தலைவரின் ஒப்புதலின் அடிப்படையில் அவர் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஈரானிய அரசியலமைப்பின்படி புதிய ஜனாதிபதியை 50 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்தநிலையில், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நீதித்துறை தலைவர் ஆகியோருடன் இணைந்து இன்னும் 50 நாட்களுக்குள் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டியது முஹம்மது முக்பரின் கடமையாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam