வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்! வெளியான அறிவிப்பு
நவம்பர் மாதம் முதலாம் திகதி (நாளை) முதல் ஒரு சில Android தொலைபேசிகளில் வாட்ஸ்அப் (WhatsApp) செயற்படாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இவ்வாறு வாட்ஸ்அப் செயற்படாத தொலைபேசிகளிலுள்ள வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் மற்றும் தரவுகளை வேறொரு தொலைபேசிகளுக்கு Backed Up அல்லது Save செய்யாத பட்சத்தில், அந்த தகவல்கள் அழிவடைந்து விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் (WhatsApp) செயலணியை தொடர்ந்தும் பயன்படுத்தக்கூடிய தொலைபேசிகளுக்கு, பாவனையாளர்களை மாறுமாறு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. Android 4.1 மற்றும் அதற்கு பின்னர் வெளியான தொலைபேசிகளில் வாட்ஸ்அப் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் புதிய IOS மற்றும் KaIOS ஆகியவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
Android 4.0.4 மற்றும் அதற்கு முன்னரான தொலைபேசிகளின் நாளை முதல் செயற்படாது என நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
