அரபிக் கடலில் கவிழ்ந்த கப்பல்! இந்திய அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை
இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில், இந்தியாவின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரியக் கொடியுடன் கூடிய எண்ணெய் மற்றும் ஆபத்தான பொருட்களை ஏற்றிச்சென்ற கப்பல் அரபிக் கடலில் கவிழ்ந்து மூழ்கியதை அடுத்து, அதிகாரிகள் அந்நாட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த விபத்தில் கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் இந்திய பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் கப்பலில் இருந்த 640 கொள்கலன்கள் காசாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கசிந்த எண்ணெய், எரிபொருள்
கப்பலில் இருந்தும் அதன் சரக்குகளில் இருந்தும் கசிந்த எண்ணெய், எரிபொருள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடற்கரைக்கு அருகிலுள்ள மக்களின் ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே, கடற்கரைக்கு அருகில் வசிக்கும் மக்கள் கரை ஒதுங்கிய கொள்கலன்கள் மற்றும் எண்ணெயைத் தொட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.





காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன 20 மணி நேரம் முன்

மண்டபத்தில் சக்தி செய்த பிரச்சனை, ஜீவானந்தம் கேட்ட கேள்வி, குழப்பத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
