விமல் வீரவங்சவின் மனைவியின் வழக்கு: நீதிமன்றத்தின் உத்தரவு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணை
முறையற்ற இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள சஷி வீரவங்ச மன்றில் முன்னிலையாகியிருந்தார்.

வழக்கு விசாரணையின்போது, தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும், அந்தத் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிவாதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், குறித்த மேன்முறையீடு தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கை அறிக்கைகள் இதுவரை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
அவற்றைப் பெற்றுச் சமர்ப்பிப்பதற்கு மேலதிக அவகாசம் வழங்கிய நீதவான், வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
[G10G7U9