ஷானி - ரவி செனவிரத்னவுக்கு எதிரான மனுக்களுக்கு உயர் நீதிமன்றத்தின் முடிவு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர, பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் அருட்தந்தை சிரில் காமினி ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை, விசாரணையின்றி தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இந்த இரண்டு மனுக்களையும் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜெயதிலகே தாக்கல் செய்திருந்தார்.
மனுக்கள் தள்ளுபடி
ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் மூலம் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் ஒரு மனு, தாக்கல் செய்யப்பட்டது.

அருட்தந்தை சிரில் காமினி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தாக்கல் செய்த முறைப்பாட்டின் உள்ளடக்கங்கள் மூலம் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் மற்றொரு மனு, தாக்கல் செய்யப்பட்டது.