விமானத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்படும் சாந்தனின் பூதவுடல்
சென்னையிலிருந்து சாந்தனின் பூதவுடல் விமானத்தின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எமது செய்தி சேவை அவரை தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கூறுகையில்,''இன்றையதினம் சென்னையிலிருந்து காலை 9.40 மணிக்கு இலங்கை நோக்கி புறப்படும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் சிறப்பு விமானம் மூலம் சாந்தனின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
பெரும் சிக்கல்கள்
சாந்தனின் பூதவுடலை இலங்கைக்கு அனுப்புவதில் பெரும் சிக்கல்கள் காணப்பட்டன.
இதற்கான அனைத்து அனுமதிகளும் பெரும் சிரமத்தின் மத்தியில் நேற்று(29.02.2024) பெற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த விமானத்தில் நானும் இலங்கை வரவிருக்கின்றேன்.இதேவேளை மீண்டும் இந்தியா செல்வது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை."'என கூறியுள்ளார்.
தமிழக அரசு சாந்தனின் பூதவுடலை கொண்டு செல்வதற்கான அனுமதிகளை பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு மட்டுமே வழங்கியுள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தனிப்பட்ட முறையில் சாந்தனின் குடும்பத்தாரால் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam
