15 வயதுக்குட்பட்ட சிறுமியை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தி தலைமறைவான சந்தேக நபர்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை
கிளிநொச்சியில் 15 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டிற்குட்படுத்திய குற்றச்சாட்டில் தலைமறைவாக இருந்த சந்தேகநபருக்கு 13 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கிளிநொச்சி பகுதியில் குறித்த சந்தேகநபர் 15 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டிற்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
13 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை
இந்த குற்றச்சாட்டுத் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், மேற்படி நபர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு 13 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த குற்றவாளி தலைமறைவாகி இருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை(25) அவர் கைது செய்யப்பட்டு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அதையடுத்து மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |