தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க தி்ட்டம்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவ்வாறான வாக்குகளை பொது வேட்பாளருக்காக திரட்ட வேண்டும் என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வாக்குகளை திரட்ட தவறினால் அடுத்தடுத்து நடக்க கூடிய எல்லா தேர்தல்களிலும் தமிழ் மக்களின் வாக்குகள் மேலும் சிதறடிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள பொதுக் கட்டமைப்பின் முதலாவது கூட்டம் யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.
தமிழ் வாக்குகள்
இக் கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்.“தமிழ் வாக்குகளை சிதறடிக்க பார்க்கின்றார்கள். தமிழ் மக்களை ஒன்றாக திரட்டுவது தான் எங்களுடைய நோக்கம்.
அவ்வாறு சிதறடிக்கப்படும் வாக்குகளை பொது வேட்பாளருக்கு நாங்கள் திரட்ட தவறினால் அடுத்து அடுத்து நடக்ககூடிய எல்லா தேர்தல்களிலும் தமிழ் மக்களின் எல்லா வாக்குகளும் மேலும் சிதறடிக்கப்படும்.
எனவே தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படுவதில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாத்து தமிழ் மக்களை திரண்ட சக்தியாக மாற்றுவது தான் எங்களது நோக்கம்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்தான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சில தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம்.
அதாவது இந்தப் பொதுக் கட்டமைப்புக்குள் கீழ் வரக் கூடிய உப கட்டமைப்புக்கள்
உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வேட்பாளர் யார் என்பதைத் தெரிவதற்கும்,
தேர்தல் அறிக்கையைத் தீர்மானிப்பதற்கும், கட்சி சின்னத்தை தீர்மானிப்பதற்குமான
உப கட்டமைப்புக்கள், நிதி மற்றும் பரப்புரை நடவடிக்கைகளுக்கான உப
கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.“ என கூறியுள்ளார்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |