ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான மனநிலை உருவாக வேண்டும்: ரெலோ கட்சி வேண்டுகோள்
ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான மனநிலை அனைத்து மக்கள் மத்தியிலும் உருவாக வேண்டும் என ரெலோ கட்சியின் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“அண்மையில் நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட ஊழலுக்கு எதிரான தேசிய வேலை
திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சித் திட்டம்
குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் சூழலிலேயே இந்நிகழ்ச்சித் திட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தின் செயல் திறன் எந்த அளவு என்பது ஆராயப்படவில்லை.
இப்படி வேலைத்திட்டங்களையும் சட்டமூலங்களையும் நாடாளுமன்றத்தில் அறிவிக்க ஒரு தரப்பு இருக்க இன்னும் ஒரு தரப்பு இது சம்பந்தமான விவாதங்களுக்கு வேட்பாளர்களை அழைக்கின்ற அறைகூவல்களை விடுத்த வண்ணம் உள்ளனர்.
ஊழலுக்கு எதிரான கட்டுப்பாடு
இவை தொடர்ந்தும் மக்களை ஏமாற்றும் செயல்பாடே மாற்றாக ஊழலுக்கு எதிரான கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அமையாது.
குறிப்பாக வடமாகாண சபை இயங்கு நிலையில் இருந்த பொழுது ஊழல் குற்றச்சாட்டில் முழு அமைச்சரவையும் கலக்கப்பட்டதை இங்கு குறிப்பிட முடியும். இதேபோன்று வடபகுதியில் மருத்துவத் துறையில் ஊழல் நிலவுதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதையெல்லாம் பகிரங்க விவாதங்களினால் கட்டுப்படுத்த முடியுமா? சம்பந்தப்பட்ட தரப்புகளும் பொது மக்கள் கட்டமைப்புகளும் ஒன்றிணைந்து ஊழலற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கும் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தேர்தல் காலங்களில் மாத்திரம் விவாத பொருளாக விடயங்களை கையாண்டு விட்டு அந்த விடயங்களை கிடப்பில் போடுவது தமது நமது சுயலாபத்துக்கு வழிவகுமே தவிர ஊழலை கட்டுப்படுத்துவதாக அமையப்போவதில்லை." என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
