தங்கத்தை குவிக்கும் இலங்கை - வரலாறு காணாத விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கியின் தங்கக் கையிருப்பு டிசம்பர் மாதத்தை விட ஜனவரியில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025 டிசம்பரில் 86 மில்லியன் டொலர்களாக காணப்பட்ட தங்கக் கையிருப்பு 2026 ஜனவரியில் 109 மில்லியன் டொலர்கள் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இது, 21.6 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.
நள்ளிரவில் பற்றி எரிந்த கார் - கொழும்பை உலுக்கிய இரட்டைக்கொலையில் சிஐடியினருக்கு கிடைத்த முக்கிய ஆதாரம்
உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்களின் அளவு
கடந்த ஜனவரி மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்களின் அளவு 6.82 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, 2025 டிசம்பர் மாத இறுதியில் பதிவாகியிருந்த 6.83 பில்லியன் டொலர் கையிருப்புடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீத சிறிய வீழ்ச்சி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்தமையால், மத்திய வங்கி வசமுள்ள தங்கக் கையிருப்பின் பெறுமதியும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri