போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார்! ஹமாஸ் அழைப்பு
காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், இஸ்ரேலிய இராணுவத்தை முழுமையாக வெளியேற்றுவதற்கும் தயாராக உள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் பற்றி விவாதிக்க தயாராக உள்ளதாக ஹமாஸ் அமைப்பின் மூத்த ஹமாஸ் அதிகாரி சமி அபு சுஹ்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய திட்டங்களை விவாதிக்க மத்தியஸ்தர்களின் கோரிக்கைக்கு நாங்கள் பதிலளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தம்
இதன்படி போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றியும் மத்தியஸ்தர்களிடம் விவாதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 53 பேரும், லெபனானில் 21 பேரும் கொல்லப்பட்ட நிலையில் எகிப்து ஜனாதிபதியால் சமாதான பேச்சவார்த்தைக்கான இந்த அறைகூவல் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் விடுக்கப்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸும் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
வடக்கு காசா
வடக்கு காசாவில் நாளுக்கு நாள் மரணங்களும், காயங்களும், அழிவுகளும் அதிகரித்து வருவதாக அவர் வருத்தம் தெரிவித்த சூழலில் தான் 2 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் எகிப்து அதிபர்.

மேலும், இஸ்ரேல் தனது தாக்குதலை காசாவில் தொடங்கி, லெபனான், ஈரான் என விஸ்தரித்துக் கொண்டே செல்வது மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan