சுமந்திரனின் தாயாருக்கு சம்பந்தன் மற்றும் மாவை இரங்கல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனின் தாயார் கொழும்பில் காலமாகியுள்ள நிலையில் அவருக்கு தமிழரசுக்கட்சியின் முன்னாள் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கொழும்பு - தெஹிவளையில் அமைந்துள்ள தனது மகளின் இல்லத்தில் நேற்று முன்தினம் (27.02.2024) சுமந்திரனின் தாயாரான 85 வயதுடைய புஷ்பராணி மதியாபரணன் காலமானார்.
மாவை அஞ்சலி
இந்நிலையில், தெஹிவளையில் அமைந்துள்ள சுமந்திரனின் வீட்டிற்கு இன்று(29) சென்ற தமிழரசுக்கட்சியின் முன்னாள் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சுமந்திரனின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேலும் சுமந்திரனின் தாயாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam