மட்டக்களப்பு அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு புத்துணர்வுச் செயலமர்வு
மட்டக்களப்பு(Batticaloa) - களுதாவளையில் அமைந்துள்ள அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் ஒழுங்கமைப்பினால் புத்துணர்வுச் செயலமர்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டமானது, இன்று (11.08.2024) களுதாவளை
கலாசார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் நீலமாதவானந்தா மகராஜ் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்குரிய விளங்கங்களையும் பயிற்சிகளையும் வழங்கினார்.
சைவ நீதி நூல்கள்
செயலமர்வில், தியானம், தலைமைத்துவம், பண்ணிசை மற்றும் யோகாசனம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் சைவ நீதி நூல்களும் விற்பனை செய்யப்பட்டன.
நிகழ்வில், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தலைவர், களுதாவளை இந்து மாமன்றத்தின் தலைவர் மற்றும் அறநெறிப்பாடசாலைகளின் ஆரிசியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |