பஷர் அல்-அசாத்தை வீழ்த்த அமெரிக்கா வகுத்த திட்டம்!
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வீழ்த்துவதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டமிட்டுள்ளதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம் சுமத்தியுள்ளார்
அல்-அசாத்தின் வீழ்ச்சி குறித்து முதன்முறையாக உரையாற்றிய காமேனி, "சிரியாவில் நடந்த விவகாரம், என்பது அமெரிக்க - சியோனிச கூட்டு சதியின் விளைவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது கருத்த வெளியிட்ட அவர்,
சிரிய அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை
“ஈராக், இஸ்ரேல், ஜோர்தான், லெபனான் மற்றும் துருக்கி அனைத்தும் நாடுகளும் சிரியாவுடன் எல்லை ரீதியான சிக்கல்களை முன்னகர்த்தி வருகின்றன.
அந்த அண்டை நாடுகளில், துருக்கியே நீண்டகாலமாக சில சிரிய எதிர்ப்புப் படைகளை ஆதரித்துள்ளது.
ஈரானிய உளவுத்துறை கடந்த மூன்று மாதங்களில் சிரிய அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரித்தது.
ஜோ பைடன்
எனினும் சிரியா அதனை புறக்கணித்துவிட்டது” என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்-அசாத் சிரியாவிலிருந்து வெளியேறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், “காசா மீதான இஸ்ரேலின் போருக்கும், லெபனானில் ஹெஸ்பொல்லாவுக்கு எதிரான போருக்கும், சிரியாவில் உள்ள குழுக்களுக்கு ஆதரவளித்ததற்கு அமெரிக்காவின் தலையீட்டினால் அல்-அசாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்ததாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |