தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அதிகாரி தவறான முடிவெடுக்க முயற்சி
தென்கொரியாவில் (South Korea) இராணுவச் சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டதற்கு முழுப்பொறுப்பேற்ற முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் ஜாங்-ஹியூன், தான் அடைக்கப்பட்டிருந்த தடுப்பு மையத்தில் தவறான முடிவெடுக்க முயற்சித்துள்ளார்.
இந்நிலையில், அவர் தற்போது நலமாக இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இராணுவச் சட்டம்
கடந்த 3ஆம் திகதி தென்கொரியாவில் இராணுவச் சட்டத்தை நடைமுறைபடுத்த ஜனாதிபதி யுன் சுக்-யோல் எடுத்த முடிவிற்கு முழுப்பொறுப்பேற்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் ஜாங்-ஹியூன் தனது பதவியில் இருந்து விலகினார்.
இதனை தொடர்ந்து, கிம் ஜாங்-ஹியூன் இராணுவச் சட்டம் விதித்தமை தொடர்பான விசாரணைகளின் போது கடந்த 8 ஆம் திகதி காவலில் வைக்கப்பட்டு பின்னர் அவர் தேசத்துரோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கிம் ஜோங் ஹியூன் நேற்றிரவு (10) தவறான முடிவெடுக்க முயன்றதைக் காவலர்கள் அவதானித்த நிலையிலேயே அவரை காப்பாற்றியதாக தென் கொரிய நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |