சபாநாயகருடன் இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் மேற்கொண்ட கலந்துரையாடல்
இலங்கைக்கான தென்கொரியத் (South Korea) தூதுவர் மியோன் லீ (Miyon Lee), சபாநாயகர் அசோக ரன்வலவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இச்சந்திப்பானது, அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தென்கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவை நினைவுகூர்ந்த தூதுவர், இந்த உறவை மேலும் வலுப்படுத்தி இலங்கையின் அபிவிருத்திக்குத் தேவையான ஒத்துழைப்பை தென்கொரியா வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
கண்டி சுரங்கப்பாதை திட்டம்
அத்துடன், இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை செயற்படுத்தி புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி அத்திட்டங்களை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கண்டி சுரங்கப்பாதை (Kandy Tunne) திட்டத்தை ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாட்டுப் நாடாளுமன்றங்களுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தலைமைத்துவ மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தென்கொரியத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர், இலங்கைக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் காணப்படும் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும், இதற்கு தென்கொரியவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவும் கலந்துகொண்டுள்ளதுடன் இச்சந்திப்பில் புதிய சபாநாயருக்கு தென்கொரியத் தூதுவர் தனது பாராட்டைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
