யாழில் கடற்றொழிலுக்கு சென்ற கணவன்: வீடு திரும்பும் முன் மனைவிக்கு ஏற்பட்ட அவலம்
யாழ்ப்பாணம் (Jaffna) மருதங்கேணி தாளையடி பகுதியில், கணவன் கடற்றொழிலுக்கு சென்றிருந்த வேளை, வீட்டில் இருந்த மனைவி தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
44 வயதான ஜெகசீலன் சங்கீதா என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் கணவன் கடற்றொழிலுக்கு சென்று வீடு திரும்பிய வேளை, பெண் சுயநினைவின்றி வீட்டின் கழிவறை அருகே விழுந்து கிடந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
அதனையடுத்து, பருத்தித்துறை வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனையில், குறித்த பெண் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri