யாழ். போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த பாடசாலை சிறுமி தப்பியோட்டம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்(Teaching Hospital Jaffna) குழந்தை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவித்து 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10.05.2024) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
நேற்று இரவு குழந்தை பிரசவித்த நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று(11) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam