காரைக்கால் திண்ம கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரத்திற்கு விரைவில் தீர்வு : டக்ளஸ் உறுதி
மக்களின் சுகாதார நலன்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் காரைக்கால் திண்ம கழிவு சேகரிக்கும் நிலையம் குறித்து நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு நியாயமான தீர்வு எடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியிற்கு இன்று (11.05.2024) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நிலைமைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளின் பிரசன்னத்துடன் ஆராய்ந்துள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு திடீரென சேகரித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகள் தீ பிடித்து எரிந்துள்ளன.
இதன் காரணமாக திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் அதனால், அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு அதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரி யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டமையை அடுத்தே அவர் குறித்த பகுதியிற்கு விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |