நெடுந்தீவுக்கு வந்தடைந்த புதிய மின் பிறப்பாக்கி: டக்ளஸின் துரித நடவடிக்கை
நெடுந்தீவு மக்கள் எதிர்கொண்ட மின்சார பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் (Douglas Devananda) அதிசக்தி வாய்ந்த மின்பிறப்பாக்கி யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) எடுத்து வரப்பட்டுள்ளது.
குறித்த மின் பிறப்பாக்கியை சுண்ணாகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர், அதனை உடனடியாக நெடுந்தீவிற்கு எடுத்துச் சென்று சேவையில் ஈடுபடுத்துவதற்கான ஆலோசனைகளை துறைசார் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
நெடுந்தீவில் மின்சார விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் மின்பிறப்பாக்கி, வினைத்திறன் குறைவடைந்தமையினால் அண்மைய நாட்களாக அப்பகுதியில் பல மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
அமைச்சரின் வலியுறுத்தல்
இந்நிலையில், அமைச்சர் முயற்சியினால் எடுத்துவரப்பட்டுள்ள அதிசக்தி வலுக் கொண்ட புதிய மின்பிறப்பாக்கி பொருத்தப்பட்ட பின்னர் நெடுந்தீவு மக்களுக்கு தடையற்ற முறையில் தொடர்ச்சியான மின்சாரம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதாக, நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் என துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்திருந்தார்.

அத்துடன் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நிறைவடையும் வரையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்புக்களை துண்டிக்காது நெகிழ்வுப் போக்குடன் செயற்படுமாறும் அமைச்சர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri