மட்டக்களப்பிற்கு விரைவில் நியமிக்கப்படவுள்ள பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்
மட்டக்களப்பில் (Batticaloa) பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு விரைவில் புதிய வைத்திய அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாவட்டத்திற்கு பொருத்தமான ஒருவரை நியமிக்குமாறு அண்மையில்
திருகோணமலைக்கு வருகைதந்த சுகாதார அமைச்சு உயரதிகாரிகளிடம் கிழக்கு மாகாண
சுகாதாரத் திணைக்களத்தினரும் மக்கள் பிரதிநிதிகளும் அவரச கோரிக்கையினை
முன்வைத்ததை அடுத்தே இந்த நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில், குறிப்பாக அடுத்த வாரம் மட்டக்களப்பு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியை புதியவர் ஒருவர் ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.
மட்டக்களப்பு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியகலாநிதி ஜி.சுகுணன், வவுனியா மாவட்ட பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக தமது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், குறித்த வெற்றியடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
