13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும்

Anura Kumara Dissanayaka Janatha Vimukthi Peramuna Sri Lanka Government National People's Power - NPP
By T.Thibaharan Dec 11, 2024 07:38 PM GMT
T.Thibaharan

T.Thibaharan

in கட்டுரை
Report
"மாகாண சபையை அகற்றியே தீருவோம்" என்றும் "மாகாண சபையை அகற்றிவிட்டு அதற்கு பதில் நாடு தழுவிய சம உரிமையை தருவோம்" என்றும் ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் நாடாளுமன்றத்தில் தமிழ், முஸ்லிம் தரப்புகளினால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட போது அதற்குப் பதிலளித்த தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் “டில்வின் சில்வாவின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து அன்றி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கருத்தல்ல“ எனக் தெரிவித்தார்.

அதற்கு டில்வின் சில்வா "ஜே.வி.பி.தான் என்.பி.பி, அதாவது தேசிய மக்கள் சக்தி ஜனதா விமுக்தி பெரமுனவில் இருந்து மாறுபட்டதல்ல." என பதிலளித்திருப்பது மிக முக்கியமானதும், கவனத்தில் கொள்ளத்தக்கதுமாகும். டில்வின் செல்வா கடந்த வாரம் குறிப்பிட்ட கருத்துக்கள் மிகமுக்கியமானதும், கருத்தில் எடுத்து வியாக்கியானப்படுத்துவது மிக அவசியமானதுமாகும்.

குறிப்பிட்ட முக்கிய கருத்துக்கள் பின்வருமாறு, 

  • இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலமாக 13ஆம் திருத்தச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படாமல் அமைச்சரவை அனுமதி பெறாமல் நிறைவேற்றப்பட்ட ஒன்று.
  • இது இந்திய அரசால் திணிக்கப்பட்ட ஒன்றே தவிர இது உரிய முறையில் நிறைவேற்றப்பட்ட சட்டமல்ல.
  • இதனை சிங்கள மக்களும் ஏற்கவில்லை தமிழ் மக்களும் ஏற்கவில்லை.
  • இந்த சட்டம் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமல் போனது மாத்திரமல்ல இன்னும் பல பிரச்சினைகளை இத்தீவுக்குள் தோற்றுவிப்பதிலேயே முடிந்துள்ளது.
  • எனவே, யாருக்கும் பயன்படாத இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறிய கருத்தை அவருடைய தனிப்பட்ட கருத்து என்று தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தின் கருத்து அல்ல என்று NPP நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்ற வாக்கு மூலத்தை கேட்டுவிட்டு கடந்து செல்லமுடியாது. டில்வின் சில்வா ஒரு சாதாரண மனிதரும் கிடையாது. இன்று இலங்கை அரசியலின் இயங்கு விசையாக தொழிற்படுகின்ற மனிதர் அவர் என்ற அடிப்படையிலேயே இதனைப் பார்க்க வேண்டும்.

இடதுசாரி ஆட்சியாளர்கள் 

இடதுசாரி இயக்கங்களின் பொறுப்பு நிலையை பொறுத்தளவில் அதன் தலைவரை விட பொதுச் செயலாளர் பலம் வாய்ந்தவர் ஆகவும் அதிகாரம் மிக்கவராகவும் இருப்பார். அந்த அடிப்படையில் இன்று ஜே.வி.பி யின் பொதுச்செயலாளர் பதவி என்பது பலம் வாய்ந்ததாகும்.

13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் | Special Political Content Of Sri Lanka Lankasri

ஜே.வி.பி இயக்கத்தின் பிரதான சக்தி அதன் பொதுச் செயலாளர் தான் என்ற அடிப்படையில் இன்றைய இலங்கையின் தலைவர் ஜனாதிபதி அநுரகுமாராவாக காட்டப்பட்டாலும் உண்மையான தலைவர் டில்வின் சில்வா தான் என்பதனை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். அதுவே உண்மையுங்கூட. இந்த அடிப்படையில் பார்த்தால் இன்று இலங்கை தீவின் அரசியல் ஜே.வி. பி எனப்படுகின்ற தீவிர இனவாத இடதுசாரி ஆட்சியாளர்கள் கைகளுக்குள் சென்று விட்டது.

அவர்கள் சமத்துவம் பேசுவார்கள் அளவால் சிறிய தேசிய இனத்தை அளவால் பெரிய தேசிய இனம் விழுங்குவதற்கான உபாயங்களில் ஒன்று சமத்துவம். சிறிய தேசிய இனங்கள் தமது பண்பாட்டை பேணி தமது  தேசிய இருப்பை நிலை நாட்டுவதை தடுப்பதற்கும் அந்த இனத்தின் தேசியத்தை உடைப்பதற்கும் கையாளப்படுகின்ற சமத்துவம் என்கின்ற அம்பு, ஆப்பு பயன்படுகிறது. இவர்கள் கூறும் சமத்துவம் அரிசிக்கும், பாணுக்கும், பருப்புக்கும், சேலைக்கும், சோத்துக்மானது.

ஆனால் தமிழ் மக்கள் வேண்டுவது தமது பாரம்பரிய தாயக நிலத்தை ஆளுவதற்கும் பாரம்பரிய தாயகத்தில் இருக்கும் வளங்களை நுகர்வதற்கும் பயன்படுத்துவதற்கும் ஆன அரசியல் அதிகாரத்தையே. இந்த இடதுசாரி ஜனநாயக ஆட்சியாளரின் "அனைவருக்கும் சமம், சமத்துவம்" என்பதன் மூலம் தமிழ் மக்களின் தாயகத்தை சிதைக்கவும், தேசிய ஒருமைப்பாட்டை அழிக்கவும், பண்பாட்டை அழிக்கவும் முற்படுகின்றார்கள். "இலங்கைமக்கள்" என்பதன் மூலம் தமிழ் மக்களை சிங்கள இனமயப்படுத்த முனைகிறார்கள் என்பதே உண்மையாகும். இன்று இலங்கை தீவில் ஏற்பட்டிருக்கும் அநுர அலை எனப்படுகின்ற சுனாமி தமிழ் மக்களை சிங்கள இனமையப்படுத்தலுக்கான பேரலையாகும்.

இதனை தமிழ் மக்கள் மிகக்கவனமாக கையாள வேண்டும். இன்று இலங்கையில் அரசியல் அதிகார மாற்றம் என்பது பாரம்பரிய பௌத்த - சிங்கள பேரனவாத மேலாதிக்க குடும்ப அரசியல் வர்க்கத்திடம் இருந்து இடதுசாரிகளிடம் கைமாறி இருந்தாலும் இங்கே பண்பு மாற்றம் எதுவும் இடம்பெறவில்லை. அரசியல் அதிகாரம் என்பது கை மாறி இருக்கிறது. ஆயினும் தீவிர இனவாத இடதுசாரிகளிடம் அரசியல் கைமாறப்பட்டிருக்கிறது.

தமிழ்த் தேசிய ஒருமைப்பாடு 

அது ஆபத்தானதும் கூட என்பதுதான் உண்மை. இங்கே இன்னொரு வகையில் பார்ப்போமானால் டில்வின் சில்வாவோ அல்லது அவர் போன்ற தீவிர இனவாத தலைவர்கள் தமிழ் மக்களின் அரசியல் செல்நெறியில் ஏற்பட்டிருக்கின்ற மந்தபோக்கை உடைக்கின்ற ஆப்புக்களாக ஒருவகையில் தொழில்ப்படுகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் | Special Political Content Of Sri Lanka Lankasri

அவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற தீவிர இனவாத நடவடிக்கைகளும், தமிழ் மக்கள் விரோத நடவடிக்கைகளும் தமிழ் மக்களை ஒரு புதிய திசைக்கு செல்வதற்கான ஒரு காலச் சூழலை தோற்றுவிக்கும். தமிழ் மக்கள் மென்மேலும் தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டுக்குள் வருவதற்கும் தேசிய ஐக்கியத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை இவர்களின் அரசியல் நடவடிக்கைகள் உந்தித் தள்ளும்.

ஆகவே, டில்வின் சில்வா போன்ற கடும் போக்காளர்கள் தமிழ் மக்களின் அரசியல் போக்கில் எதிரியின் வடிவில் உள்ள நண்பர்களாகவே எதிர்காலத்தில் தோன்றுவர் என்பதும் உண்மைதான். ஆயினும் இவர்கள் பற்றிய விழிப்புணர்வு தமிழ் அரசியல் பரப்புக்கு தேவையாக உள்ளது. இந்தப் பண்பு நிலைமாற்றத்துக்கு ஏற்ப தமிழ் மக்கள் தமது அரசியலை முன்னெடுக்க தயாராக வேண்டும்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆம் திருத்தச்சட்டமும் அதன் மூலமாக தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட மாகாண சபையானது தமிழ் மக்களிக்கு தீர்வையும் அல்லது நலனையும் பெற்றுத்தரவில்லை. ஆயினும் அது சிங்கள இனவாத அரசுக்கு ஒரு பெரும் சிக்கலைக் கொடுத்தது என்பது உண்மை. அதனாற்தான் அவர்கள் அதனை நீக்க வேண்டும் என்று முந்தைய ஜனாதிபதிகள் பலரும் நடைமுறைப்படுத்த மறுத்துள்ளார்கள்.

அன்றைய காலத்தில் தமிழ் மக்களுக்கு என ஒரு பிராந்திய அலகைத் தந்தது என்ற அடிப்படையில் நடைமுறையில் இல்லை என்றாலும் தமிழ்மக்களுக்கான பிராந்திய அதிகார அலகுக்கான சிந்தனை முன்னெடுப்பு கொள்கையளவில் இதிலுண்டு. இந்த இடத்தில் இந்திய - இலங்கை அரசுகளுக்கு இடையே முரண்பாட்டையும் பகைமையையும் வளர்க்கக்கூடிய வகையில் தமிழ்த் தரப்பு இதனைக் கையாள வேண்டுமே தவிர சிங்கள அரசுக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் பல்லக்குக் காவுவதாக அமைந்திடக் கூடாது.

இந்தியாவின் ஊடுறுவல்  

எந்தவொரு சிங்களக் கட்சியும் மாகாண சபைக்குத் தயாரில்லை என்ற முன்னறிவுடன் தமிழ்த்தரப்பு அரசியலைத் துணிவுடன் முன்னெடுக்க வேண்டும். பனிப்போரின் இறுதி காலகட்டத்தில் இந்து சமுத்திர பிராந்தியத்தின் ஆதிக்க சமநிலையை தன் பக்கம் வைத்திருப்பதற்கு இந்தியா, இலங்கை தீவில் தலையிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட வேலை தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்குவதாக இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா, இலங்கை தீவுக்குள் கால் பதித்தது.

அத்தகைய ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இந்தியாவை எதிர்க்க முடியாத இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியா என்கின்ற அந்த பெரிய மதங்கொண்ட யானையை சகதிக்குள் இழுத்து மாட்டி விட்டு ஈழத் தமிழர்களையும் அதில் பிணைத்துவிட்டு 13ஆம் திருத்தச் சட்டம் என்கின்ற பொறிக்குள் சிக்க வைத்து விட்டார்.

13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் | Special Political Content Of Sri Lanka Lankasri

இலங்கை - இந்தியா ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டத்தின் போது தமிழ் மக்களுக்கு அது ஒரு வட- கிழக்கு தற்காலிகமாக இணைந்த மாகாணம் என்ற ஒரு பிராந்திய நில அலகை மட்டுமே அதிகாரப் பரவலாக்கள் என்ற விடயம் ஒப்புக்கொள்ளப்பட்டதே தவிர கடல் சார்ந்தோ அல்லது பாக்கு நீரிணை சார்ந்தோ எந்த அதிகாரமும் அல்லது ஆளுகையும் அங்கு குறிப்பிடப்படவில்லை.

கடல் சார்ந்த அதிகாரம் அல்லது ஆளுகை பற்றி அதற்குப் பின்னர் 2002இல் மேற்கொள்ளப்பட்ட ரணில் - பிரபா ஒப்பந்தத்திலும் கடல் சார்ந்த ஆளுகை வரையறை செய்யப்படவில்லை. அது பற்றி தமிழர் தரப்பு கவனம் செலுத்தவும் இல்லை என்பது துரதிஷ்டவசமானது.

ஆயினும், பாக்கு நீரிணையின் மீது சிங்கள ஆட்சியாளர்கள் தமது வலுவான பிடியை 1987 இந்திய - இலங்கை ஒப்பந்தத்திலும் சரி 2002 ரனில் - பிரபா ஒப்பந்தத்திலும் சரி தெளிவாகப் பேணியுள்ளார்கள் என்பது இன்று கவனம் கவனத்தில் கொள்ளத்தக்கது.

அன்றைய இரட்டை மைய உலக அரசியல் பணிப் போர் காலத்திலும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இந்தியாவையும் தமிழக விடுதலைப் போராட்டத்தையும் ஒரே நேர்கோட்டில் வைத்து ஒரே மேசையில் வைத்து வெற்றி கொள்ளத்தக்க சுதந்திர வியூகத்தை நீண்ட கால நோக்கிலான அடிப்படையாகவும், தற்காலிக நெருக்கடிகளுக்கு முதன்மை கொடுப்பதாகவும் இந்து சமுத்திர பிராந்திய வல்லரசு ஒன்றை இந்து சமுத்திரத்துக்குள் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் இலங்கை தீவுக்குள் இந்தியாவுக்கு எதிரான ஒரு பொறிவலையாக மீள முடியாத ஒரு சக்கர வியூகமான (Entanglement) ஒன்றை வகுத்துள்ளார்.

இந்திய இராணுவம் 

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையும் அதன் கீழான 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் வடிவமைத்ததன் மூலம் ஈழத் தமிழர்களையும் இந்தியாவையும் மீள முடியாத ஒரு சக்கர வியூகத்திற்குள் (Entanglement) அகப்படுத்தி அதாவது சிறைப்படுத்தி அதன் வாயிலாக பாரம்பரிய நண்பர்களாய் இருந்து வந்த ஈழத்தமிழரையும் இந்தியாவையும் ஒரு மேசையில் வைத்தே இரு பகுதி நேரம் மோத வைத்து பகை நிலைக்குத் தள்ளி, இறுதியில் இந்திய இராணுவத்தையும் விடுதலைப் புலிகளையும் மோத விடுவதில் வெற்றி பெற்று இந்திய இலங்கை ஒப்பந்தம் நடைமுறைப்படுத்த முடியாத சூழலுக்குள் தள்ளி அந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தினால் கொண்டுவரப்பட்ட மாகாண சபையை பட முடியாதவாறு இடியப்ப சிக்களாக்கி இந்தியாவை இலங்கைக்குள் மீள முடியாத சகதிக்குள் சிக்கவைப்பதில் வெற்றி பெற்றார்.

13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் | Special Political Content Of Sri Lanka Lankasri

இந்த பின்னணியில் தான் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவால் ஈழத் தமிழர்களுக்கு ஒரு தீர்வாக மாகாண சபை ஒன்றை உருவாக்குவதற்கான 13ஆம் திருத்தச் சட்டம் இலங்கையில் கொண்டுவரப்பட்டது.

இதனைக் கொண்டு வருகின்ற போது ஜே.ஆர்.க்கு நன்கு தெரியும் இதனை ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது என்று. ஆயினும் இந்தியாவை கையாள்வதற்கும், ஆயுதப் போராட்ட வளர்ச்சியை கையாள்வதற்கும் இதனை அவர் ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தி விட்டார்.

தனக்கு முன்னே எழுந்து நின்ற இரண்டு எதிரிகளையும் ஒரு மேசையில் அமர்த்தி வைத்துப் பேசி தான் விட்டுக் கொடுப்பது போல விட்டுக் கொடுத்து தனது இரண்டு எதிரிகளையும் முட்டி மோத வைப்பதற்கான சூழ்ச்சிகளை பின்னி இறுதியில் இரண்டு தரப்பையும் பரம வைரிகளாக்கி வாய்க்கால் பேரவலம் வரும்வரையான அரசியல் ராஜதந்திர குழிபறிப்பை ஜே ஆர் 1987இல் செய்து முடித்து விட்டார்.

இன்று இலங்கைத் தீவில் நடைமுறையில் இருக்கின்றது என்று சொல்லப்படுகின்ற 13ஆம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கான தீர்வு என்பதன் பெயரால் இருக்கின்ற போதும் தமிழ் மக்களுக்கு அதனால் தீர்வேதும் கிடைக்கவில்லை என்பதனால் தமிழ் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் அதனை எதிர்க்கின்றனர். அதே நேரம் மறுவளத்தே தமிழ் மக்களுக்கான தீர்வின் பெயரால் இந்தியாவினால் கொண்டுவரப்பட்டதுதான் 13ம் திருத்தச் சட்டம் என்பதனால் சிங்கள மக்களும் அதனை எதிர்க்கின்றனர்.

13ம் திருத்தச் சட்டத்தை இலங்கையின் உள்நாட்டு அரசியலில் மட்டுமன்றி இந்திய உபகண்டம் தழுவிய பிராந்தி அரசியலிலும் இந்தியாவுக்கு எதிரான ஓர் Entanglement ஆக இன்று மாறிவிட்டது.

13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் | Special Political Content Of Sri Lanka Lankasri

மாகாண சபையில் ஏற்பட்ட தவறுகளும் குறைபாடுகளும் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வையோ, நலனையோ வழங்காததனால் மாகாண சபைக்கான எதிர்ப்பு வலுவடைந்து தமிழ் அரசியல் கட்சிகளில் ஒரு சாரார் தீவிர தமிழ் தேசியவாதம் பேசி சவப்பெட்டி ஊர்வலமாக புறப்பட்டு இந்திய எதிர்ப்பாக சித்தரிப்பதற்கான வாய்ப்பை இந்திய எதிர்ப்பாளிகளுக்கு வழங்கிவிட்டது.

இதன் பெயரால் இந்திய எதிர்ப்பு வாதம் தமிழ் மக்கள் மத்தியில் தற்போது ஸ்தாபிதமடைய செய்யப்பட்டு விட்டமை தமிழ் மக்களின் சர்வதேச அரசியல் முன்னெடுப்பிலும் சர்வதேச உறவிலும் பெரும் பின்னடவையே தோற்றுவித்துள்ளது.

பிராந்திய அரசியலை வெற்றி கொள்ளாமல் பிராந்திய அரசியல் உறவில் பலமடையாமல் சர்வதேச உறவை தமிழ் மக்களால் ஒருபோதும் கையாள முடியாது. இன்றைய உலக ஒழுங்கின் நியதிகள் பிராந்திய அரசியலில் தமிழ் மக்கள் செல்வாக்கு செலுத்தாமல் உறவை வளர்க்காமல் இந்தியாவின் அனுசரணையின்றி எந்த ஒரு அரசியல் தீர்வையோ உரிமைகளையோ இலங்கை தீவுக்குள் தமிழ் மக்கள் பெற்று விட முடியாது என்பதுதான் எதார்த்தம்.

ஆனாலும் அதனைத் புரிந்து கொள்ளக்கூடிய மனநிலையிலோ, அல்லது அரறிவியல் முதிர்ச்சியிலோ, அல்லது அதற்கான மனப்பக்குவத்திலோ தற்போது தமிழ் மக்கள் இல்லை. அத்தகைய ஒரு அரசியல் எதார்த்தத்திற்கு தமிழ் மக்கள் வரும் வரைக்கும் தமிழ் மக்களுக்கான தீர்வு வெகு தொலைவிலேயே உள்ளது.

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 11 December, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US