யாழ். நல்லூரில் சீமானின் வெற்றிக்காக வைக்கப்பட்டுள்ள பதாகை!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வெற்றிக்காக, யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பதாகை (Banner) ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக தேர்தல்
தமிழக அரசியல் களத்தில் ஈழத்தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்து வரும் சீமான், தமிழக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பதாகை வைக்கப்பட்டிருக்கலாம் என பேசப்படுகின்றது.

குறித்த பதாகை யாரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை தெளிவாக கிடைக்கப் பெறவில்லை.
தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஈழத்தமிழர்கள் அவருக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பதாகை அமைக்கப்பட்டுள்ளதா என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.
பொதுமக்கள் அதிகம் நடமாடும் வெளியில் வைக்கப்பட்டுள்ள இந்த பதாகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 17 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri