அச்சத்துடன் சொந்த ஊர் திரும்பும் தெற்கு லெபனான் மக்கள்: தற்காலிக போர்நிறுத்தத்தால் பதற்றம்
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே எட்டப்பட்டுள்ள 10 நாள் போர்நிறுத்தத்தை முன்னிட்டு, தெற்கு லெபனானில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்கும் கிராமங்களுக்கும் இன்று அதிகளவில் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், இந்த வருகை நிரந்தரமானது அல்ல என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பல வீடுகள் விமானத் தாக்குதல்களால் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாலும், போர்நிறுத்தம் எந்த நேரத்திலும் முறியக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாலும், மக்கள் தங்கள் உடமைகளைச் சேகரிக்கவும் சிறிய அளவிலான திருத்தப் பணிகளைச் செய்யவும் மட்டுமே அங்கு செல்கின்றனர்.
திருத்தப் பணிகள்
பெரும்பாலானோர் இரவு நேரங்களில் தங்குவதைத் தவிர்த்து பாதுகாப்பான இடங்களுக்கே மீண்டும் திரும்புகின்றனர்.

போர்நிறுத்தம் அமுலுக்கு வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் பல கிராமங்களில் இன்னும் தொடர்ந்து வருகின்றன.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதால், பல பகுதிகள் இன்னும் பாதுகாப்பற்ற சூழலிலேயே காணப்படுகின்றன.
இந்தத் தற்காலிக அமைதி எப்போது வேண்டுமானாலும் குலையலாம் என்ற நிச்சயமற்ற தன்மையே மக்களிடையே மேலோங்கி காணப்படுகிறது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 9 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam