ட்ரம்புக்கு ஆபத்தாக போகும் நவம்பர் 2026: தடுமாறும் இராணுவக் கட்டமைப்பு
2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் தேர்தல் இடம்பெறும் வரை டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் உச்சகட்டத்தில் யுத்தம் செய்வதற்கு தயாராக இருக்க மாட்டார் என சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைப் பேராசிரியர் கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
ஆனால், தேர்தலின் பின்னர் ஈரான்- அமெரிக்கப்போர் மீண்டும் வெடித்தால் ஆச்சரியப்பட தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஈரான்- அமெரிக்கா பேச்சுவார்த்தை நேரத்தில் தாம் இராணுவத்தை பலப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பேச்சுவார்த்தை இடம்பெற்று விட்டது என்பதற்காக இரு தரப்பினரும் சுமூகமாக இருந்து விடப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 9 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam