உலகமே உற்றுநோக்கும் அமைதி பேச்சுவார்த்தை! இன்னும் முடிவெடுக்கவில்லை என ஈரானின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஈரானுக்கு எந்தத் திட்டமும் இல்லை என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான திட்டங்கள் எதுவும் எங்களிடம் இல்லை, இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேஅமைதிப் பேச்சுவார்த்தை இன்று(20) திங்கட்கிழமை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளது.
ஆறு மணிநேரமாக மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! கடலின் நடுவில் அதிரடி காட்டிய அமெரிக்கா - வெளியான காணொளி
அமைதிப் பேச்சுவார்த்தை
ஈரான் கொடி ஏற்றப்பட்ட கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியதைத் தொடர்ந்து, தெஹ்ரான் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று நடைபெறுமா இல்லையா என்ற உறுதிப்படுத்தலுக்காக பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் ஆவலுடன் காத்திருக்கிறது.

இந்தநிலையில்,ஈரானுடனான புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்காக ஒரு தூதுக்குழு பாகிஸ்தானுக்குப் பயணம் செய்யும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்குவார் என அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸிடம் வெள்ளை மாளிகை தெரிவித்தது.
எதிர்வரும் புதன்கிழமையுடன் தற்காலிக போர்நிறுத்தக் காலம் முடிவடையவுள்ள நிலையில், ஒரு நிரந்தர உடன்படிக்கையை எட்டுவதற்காக பாகிஸ்தான் முன்னிலையில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் தீர்க்கமானதாகக் கருதப்படுகிறது.