தங்கத்தின் விலையில் தொடரும் மாற்றம் - இலங்கையில் இன்று பதிவாகியுள்ள நிலவரம்
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (20.04.2026) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4796 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் 80.21 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் வீடொன்றில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் - தாய், மகள் உட்பட மூவர் பலி - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் நிலவரம்
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.