நடுக்கடலில் ஈரானின் பாரிய கப்பலை தாக்கிய அமெரிக்க படை.. கொந்தளிக்கும் ஈரான்
புதிய இணைப்பு
ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைமையகமான காதம் அல்-அன்பியா (Khatam al-Anbiya), ஈரானிய கப்பலை கைப்பற்றிய அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை "போர்நிறுத்த மீறல்" என்று அழைத்துள்ளது.
முதலாம் இணைப்பு
அமெரிக்கா விதித்துள்ள ஹோர்முஸ் நீரிணை கடல்வழி முற்றுகையை மீற முயன்ற ஈரானியக் கொடியுடன் வந்த சரக்குக் கப்பலை அமெரிக்கப் படைகள் இடைமறித்துத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோஷியல் பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கப் படைகள் அந்தச் சரக்குக் கப்பலுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அது முற்றுகைப் பகுதியைத் தாண்டிச் செல்ல முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்..
எனவே, கப்பல் நிறுத்தப்படாததால், அமெரிக்கப் படைகள் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், "கப்பலின் எஞ்சின் அறை (Engine Room) மீது துல்லியமாகத் துளையிடும் வகையில் தாக்குதல் நடத்தி, அந்த இடத்திலேயே கப்பலை நகர முடியாமல் முடக்கினோம்" என ட்ரம்ப் விவரித்துள்ளார்.
தற்பொழுது அந்த ஈரானியக் கப்பலை அமெரிக்க இராணுவம் முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
"எமது தடையை மீற நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடம்" என்ற தொனியில் டிரம்ப் விடுத்துள்ள இந்த அறிவிப்பு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே கொழுந்துவிட்டு எரியும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
'வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்' பாடலுக்கு நடனமாடிய நடிகை மாளவிகா வா இது! லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ Cineulagam
மெஸ்ஸிக்கு ஒருமுறை இல்லை! FIFA வரலாற்றிலேயே இருமுறை Golden Boot வாங்கிய முதல் வீரர் இவர்தான் News Lankasri