அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தைக்காக ஜே டி வான்ஸ் பாகிஸ்தான் செல்லமாட்டார்: ட்ரம்ப் அறிவிப்பு
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நாளை(19) திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில், அமெரிக்கத் தூதுக்குழுவை அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) வழிநடத்த மாட்டார் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்ப் அறிவிப்பு
முன்னதாக, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் மைக் வால்ட்ஸ் மற்றும் எரிசக்தித் துறை செயலாளர் கிறிஸ் ரைட் ஆகியோர், இந்த முக்கிய பேச்சுவார்த்தைக்கு வான்ஸ் தலைமை தாங்குவார் எனத் தெரிவித்திருந்த நிலையில், ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகவே அவர் அங்கு செல்லவில்லை, மற்றபடி ஜே.டி ஒரு சிறந்த தலைவர்" என ஏபிசி (ABC News) செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமையுடன் தற்காலிக போர்நிறுத்தக் காலம் முடிவடையவுள்ள நிலையில், ஒரு நிரந்தர உடன்படிக்கையை எட்டுவதற்காக பாகிஸ்தான் முன்னிலையில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் தீர்க்கமானதாகக் கருதப்படுகிறது.
துணை ஜனாதிபதி வான்ஸ் தவிர்க்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள்தான் அனுமதி அளித்தீர்கள்.! ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச் சூடு - இந்திய கப்பலில் இருந்து வந்த அவசர ஒலி